Tamil News

எல்லாம் முடிஞ்சி போச்சி… ஆன்மீக பயணம் செல்லும் சிம்பு

நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தில் செப்டம்பர் 22ம் தேதிவரை அவரது போர்ஷன்கள் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சிம்புவின் நடிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள எஸ்டிஆர்48 படத்தின் சூட்டிங் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில், அடுத்தப் படத்தில் நடிக்கவும் சிம்பு தயாராகி வருவதாகவும் அடுத்தடுத்த இயக்குநர்களின் கதைகளை கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் நிறைவு செய்ய மணிரத்னம் திட்டமிட்டு அதற்கேற்ப அடுத்தடுத்த பிளான்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் வரும் செப்டம்பர் 22ம் தேதியுடன் சிம்புவின் போர்ஷன்கள் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக ஆன்மீக சுற்றுப்பயணத்தில் சிம்பு ஏறக்குறைய ஒரு மாத காலங்கள் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அவர் இது போன்றதொரு பயணத்தை விடிவி கணேஷுடன் இணைந்து மேற்கொண்ட நிலையில் தற்போது தனியாகவே அவர் ஆன்மீக சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளார்.

Exit mobile version