Site icon Tamil News

வைட்டமின் பி12 அதிகரிப்பால் ஏற்படும் பக்க விளைவுகள்!

நம்முடைய உடல் சீராக இயங்குவதற்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியம். அதோடு நாம் உண்ணும் உணவுகளை நம்முடைய உடல் கிரகித்துக்கொள்ளவும், உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கும் வைட்டமின் பி12 உதவுகிறது.

கோபாலமின் என்று அழைக்கப்படும் வைட்டமின் பி12 மனித உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வைட்டமின் பி12 எட்டு பி வைட்டமின்களில் ஒன்றாகும். ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதில் வைட்டமின் பி12 குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இது மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டையும் ஆதரிக்கிறது.

டூத் பிரஷ்களை சுத்தப்படுத்த சோப்பு பயன்படுத்தலாமா?

உடலில் வைட்டமின் பி12 பற்றாக்குறையால் பசியின்மை, மலச்சிக்கல், திடீர் எடை குறைவு, சிலநேரம் நினைவு சமநிலையின்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரும்பாலான மருத்துவர்கள் பி12 நிறைந்த உணவுப்பொருள்களோடு, மாத்திரையையும் பரிந்துரைக்கின்றனர். நம் உடலில் பி12 குறைபாட்டிற்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நரம்பியல் மற்றும் உளவியல் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதேசமயம் அதிகப்படியான பி12 எடுத்துக்கொள்வதினாலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் பி12 அதிகரிப்பால் ஏற்படும் பக்க விளைவுகள்?

மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டும் பி12 எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. அதேசமயம் உடலில் அதிகப்படியான பி12 குறைபாடுகளுக்கு மட்டுமே ஊசி மூலம் வைட்டமின் பி12 உட்செலுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.

வைட்டமின் பி12

பெரும்பாலான பெண்கள் உடல் வலி, கால் வலி, இடுப்பு வலிக்கும் பி-12 ஊசியை மருத்துவர்களின் ஆலோசனையின்றி செலுத்திக் கொள்கின்றனர். இதனால் ஒருசிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

உடலில் பி-12 அதிகரிப்பால் லேசான வயிற்றுப்போக்கு, அரிப்பு, தோல் வெடிப்பு, தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, நுரையீரல் வீக்கம் மற்றும் இதய செயலிழப்பு, நரம்பு ரத்த உறைவு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஒரு சிலருக்கு பி-12 ஊசி அல்லது மாத்திரை எடுத்துக்கொண்ட உடனே முகம், நாக்கு மற்றும் தொண்டை வீக்கம், விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் அந்த நேரத்தில் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவது பெரிய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

ஒருவர் எவ்வளவு வைட்டமின் பி-12 எடுக்க வேண்டும்?

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் டிரஸ்டெட் சோர்ஸின் படி, 14 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தினசரி 2.4 மைக்ரோகிராம்கள் எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் தினசரி 2.6 எம்.சி.ஜியும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் 2.8 எம்.சி.ஜியும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இயற்கையாக வைட்டமின் பி-12 அதிகரிக்கும் உணவுகள்

இயற்கையாகவே நாம் உடலுக்குத் தேவையான பி-12 கிடைக்க முட்டை, பாலாடைக்கட்டி, மீன், மத்தி மீன், ஈரல், சிவப்பு இறைச்சி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Exit mobile version