Site icon Tamil News

ட்ரம்ப்பை சுட்டவரை பற்றி நண்பர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தியவர் பாடசாலையில் படித்த போது தொடர்ந்து துன்புறுத்தப்பட்டவர் என்றும், வீடியோ கேம்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர் என்றும் அவரது முன்னாள் வகுப்பு தோழர் ஒருவர் கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த டொனால்ட் ட்ரம்ப் மீது நேற்று ஒருவர் துப்பாக்கிசூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில், டொனால்டு ட்ரம்ப் காயத்துடன் தப்பிய நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த நபர் துப்பாக்கி சூடு நடத்திய அடுத்த சில நொடிகளில் அங்கிருந்த அமெரிக்க ரகசிய சேவை ஸ்னைப்பர் நபரை சுட்டுக்கொலை செய்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் அவருக்கு 20 வயது என அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து, டொனால்ட் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தியவர் குறுக்ஸ் குறித்து அவர் பாடசாலையில் படித்ததாக கூறிய முன்னாள் வகுப்பு தோழர் ஜேசன் கோலர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

20 வயதான குறுக்ஸ், “வேட்டையாடும்” உடைகள் மற்றும் வீடியோ விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். அவர் அடிக்கடி தனிமையாகவும், “சமூக ரீதியாக தடுத்து நிறுத்தப்பட்ட” மாணவராகவும் இருந்தவர்” என கூறினார்.

மேலும், பிட்ஸ்பர்க் டிரிப்யூன்-ரிவ்யூ செய்தியின்படி, தோமஸ் 2022 ஆம் ஆண்டில் பெதெல் பார்க் உயர்நிலைப்பள்ளியில் இருந்து பட்டம் பெற்றார். அவர் தேசிய கணித மற்றும் அறிவியல் முன்முயற்சி அமைப்பால் 500 டொலர் “ஸ்டார் விருது” பெற்றார் என்றும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

Exit mobile version