Site icon Tamil News

உயிரிழந்த வங்கதேச எம்.பி குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பங்களாதேஷ் எம்பி அன்வருல் அசிம் அனார் ,நியூ டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த உடனேயே தலையணையால் மூச்சி திணற செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மேற்கு வங்க சிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட முகமது சியாம் ஹுசைன், வங்கதேச அரசியல்வாதியின் கழுத்தை நெரிப்பதற்கு ஒரு பெண் உதவி செய்ததை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.

அந்தப் பெண், அமெரிக்கப் பிரஜையான அக்தருஸ்ஸாமானின் காதலி என்றும், இந்த வழக்கில் பிரதான குற்றவாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எம்.பி.யைக் கொன்ற பிறகு, அவர்கள் அவரது உடலை பல சிறிய துண்டுகளாக நறுக்கி, பிளாஸ்டிக் பைகளில் போட்டு, பின்னர் வெவ்வேறு மறைவிடங்களுக்கு தப்பிச் செல்வதற்கு முன், நியூ டவுன், பாக்ஜோலா கால்வாயின் பல பகுதிகளில் வீசினர்,” என்று அவர் தெரிவித்தார்.

உடலின் சில பாகங்கள் டிராலி சூட்கேஸில் வைக்கப்பட்டு பின்னர் வங்காளதேசத்தின் பாங்கான் எல்லைக்கு அருகில் வீசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேபாள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்ட சியாமிடம் விசாரணை நடத்திய பின்னர், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கால்வாய் அருகே மனித எலும்புகளின் பகுதிகளை மாநில சிஐடி மீட்டது.

ஹுசைன் மேற்கு வங்காளத்திற்கு அழைத்து வரப்பட்டு வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தால் சிஐடியின் 14 நாள் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

எம்.பி.யின் நெருங்கிய நண்பரான அக்தருஸ்ஸாமான் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு சுமார் ₹ 5 கோடி கொடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அக்தருஸ்ஸாமானுக்கு கொல்கத்தாவில் ஒரு பிளாட் உள்ளது, அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்று சிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version