Site icon Tamil News

ஜெர்மனி கத்தோலிக்க திருச்சபையில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் அம்பலம்

ஜெர்மனியில் கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்திருப்பது தற்பொழுது வெளிவந்துள்ளது.

1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பேர்ளின் நகரத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் பல பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக தற்பொழுது பாதிக்கபட்டவர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள்.

குறிப்பாக 1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மறைமாவட்டத்தில் கடமையாற்றிய 6 மத குருமார்கள் இவ்வகையான துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுப்பட்டதாக பாதிக்கப்பட்ட பலர் தற்பொழுது கருத்து தெரிவித்துள்ளனர்.

பாலியல் துன்புறுத்துக்கால் பாதிக்கப்பட்ட பலர் தற்பொழுது தங்களது ஆதங்கத்தை தெரிவித்து இந்த விடயத்தை வெளிச்சத்துககு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கொலோன் மறை மாவட்டத்தில் இவ்வகையான சம்பவங்கள் இடம்பெற்றும் இந்த மறை மாவட்டத்தில் ஆயராக இருந்த பொலஸ்கி என்பவர் இந்த சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆயருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது இவரது இருப்பிடம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலு் கொலோன் நகரத்தில் இந்த ஆயருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version