Site icon Tamil News

இலங்கையில் அதிர்ச்சி – தாகத்திற்காக நீரை தேடி வரும் விலங்குக்கு நடக்கும் கொடூரம்

செல்லகதிர்காமம் பிரதேசத்தில் தாகத்திற்காக நீரை தேடி வரும் விலங்குகளை விஷம் வைத்து கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்யும் மோசடி ஒன்று தொடர்பில் செய்தி பதிவாகியுள்ளது.

செல்லகதிர்காமம் எல்லையில் உள்ள யால வனப்பகுதியில் வேட்டையாடுபவர்கள் நீர்நிலைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் குழிகள் அமைத்து அதில் விஷம் கலந்து இச்செயலை மேற்கொண்டுள்ளதை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு விலங்குகளை வேட்டையாடி விலங்குகளின் இறைச்சியை கதிர்காமம் பகுதிகளுக்கு வருபவர்கள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக கதிர்காம யாத்திரைக்கு வரும் யாத்திரிகர்களை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு விஷத்தினை உட்கொண்ட விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்வதன் மூலம் மனித உயிருக்கு ஆபத்தும் ஏற்படுவதாக வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த விலங்குகளின் சடலங்கள் பலவற்றை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ள போதிலும், இதுவரையில் அது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது

Exit mobile version