Site icon Tamil News

ஹூதி தாக்குதலுக்கு இலக்கான கப்பல் – இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து இலங்கையர்கள் இருவர் மீட்கப்பட்டனர்.

அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவிற்கான இலங்கை தூதுவரால் இருவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

குறித்த இருவரும் தற்போது ஜிபுட்டியில் தங்கியுள்ளனர். சீனாவிலிருந்து ஜெட்டா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த True Confidence வணிகக் கப்பல் மீது யேமன் நேரப்படி 07ஆம் திகதி காலை 11.30 அளவில் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலால் கப்பலின் கட்டுப்பாட்டு அறையை அண்டிய பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் யேமனிலுள்ள ஏடன் துறைமுகத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது.

23 பேரைக் கொண்ட பணியாளர்கள் கப்பலில் இருந்துள்ளதுடன், அவர்களுள் நால்வர் கடுமையான தீக்காயங்களுக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த கப்பலில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் இருந்துள்ளதுடன், அவர்களில் இருவர் இலங்கையர்களாவர். நேபாள பிரஜை ஒருவரும் அதில் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version