Tamil News

சோனாக்ஷி சின்காவுக்கு திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகல… அதுக்குள்ள இப்படி ஆகனுமா?

பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் 23-ம் தேதி தான் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்காவுக்கு அவரது காதலருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மகள் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், திடீரென சத்ருவின் சின்ஹா இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

77 வயதாகும் சத்ருகன் சின்ஹா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவுக்கு கடந்த சில நாட்களாகவே வைரல் ஃபீவர் இருந்து வந்த நிலையில், அவரை மருத்துவமனையில் இன்று அனுமதித்துள்ளோம் என அவரது மகன் லவ் சின்ஹா வட இந்திய மீடியாக்களுக்கு அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளார்.

பயப்படும் படி எதுவும் இல்லை என்றும் ஓரிரு நாளில் அப்பா வீட்டுக்கு திரும்பிவிடுவார் என்றும் லவ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Exit mobile version