Site icon Tamil News

ஷாருக்கான் உடன் ஆட்டம் போட்ட அட்லீ… வைரலாகும் வீடியோ…

அட்லீ, இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ, நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளனர்.

ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

வந்த இடம் என தொடங்கும் அப்பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அனிருத்தே பாடி இருந்தார்.

இந்நிலையில், வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோவை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடல் முழுவதும் சென்னையில் தான் படமாக்கப்பட்டது. இதற்காக பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்ட இப்பாடலுக்கு ஷோபி மாஸ்டர் தான் கோரியோகிராப் செய்துள்ளார்.

இப்பாடல் மேக்கிங்கின் மூலம் இப்பாடலில் அட்லீயும் ஷாருக்கான் உடன் சேர்ந்து நடனமாடி உள்ளது தெரியவந்துள்ளது.

இப்பாடலில் ஷாருக்கான் தமிழில் பாடி நடனமாடியதையும் மேக்கிங் வீடியோவில் இணைத்துள்ளனர்.

அவர் தமிழில் பாடி முடித்ததும் அட்லீ சென்று ஷாருக்கானை கட்டிப்பிடித்த காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளது

Exit mobile version