Site icon Tamil News

தெர்மல் கேமராவில் சிவப்பாக காட்சியளிக்கும் சியோல்!

அதிகம் சூடாக உள்ள பொருட்களை சிவப்பு நிறமாக காட்டும் தெர்மல் கேமரா திரையில் தென்கொரியாவின் சியோல் நகரம் சிவப்பாக காட்சியளிக்கிறது.

குளிர்ச்சியான பொருட்கள் ஊதா அல்லது நீல நிறத்திலும், வெதுவெதுப்பானவை பச்சை நிறத்திலும், சூடானவை மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திலும், அதிக சூடானவை சிவப்பு நிறத்திலும் காட்டப்படுகின்றன.

இந்நிலையில், சியோலில் நிலவி வரும் வெப்ப அலையில் பொருட்கள் அதிக வெப்பத்துடன் தகிப்பது படம்பிடிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வரும் சூழலில், நான்கடுக்கு வெப்ப அமைப்பில் அதிகபட்ச வெப்ப எச்சரிக்கையை அரசு விடுத்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version