Site icon Tamil News

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் மூத்த தளபதி பலி

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.

டமாஸ்கஸின் தென்கிழக்கில் உள்ள சைதா சைனாப் என்ற இடத்தில் வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர் சையத் ராஸி மௌசவி என்ற மூத்த ராணுவ அதிகாரி என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய படைகள் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version