Site icon Tamil News

தலைநகர் கார்டூமில் கடும் வான்வழி தாக்குதல்

சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

இதில் பொதுமக்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு சில நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

சவுதி அரேபியாவில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் நேற்று கார்டூமில் கடும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டது. இது அந்த நகரத்தை உலுக்கியது.கத்தார் நாட்டு தூதரகத்துக்குள் ஆயுதங்களுடன் சிலர் புகுந்து சூறையாடினர்.

இதற்கிடையே சூடானில் 22ம் திகதி மாலை முதல் 7 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ராணுவத்தின் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version