Site icon Tamil News

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவி உயிரிழப்பு

பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் பெற்று தையல் இயந்திரத்தில் இயக்க முயன்ற பாடசாலை மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நுகேகொட மஹாமாயா பெண்கள் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் நிஷானி பியுமிகா என்ற 17 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த இந்த சிறுமி வீட்டிற்கு வந்த பிறகு, செயலிழந்த நிலையில் இருந்த தையல் இயந்திரத்தை இயக்க முயன்றார்.

தையல் இயந்திரத்தின் மோட்டார் மற்றும் வயரை அறையின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த மின் செருகியுடன் இணைக்க மாணவி முயற்சித்து தோல்வியடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வயருடன் இணைக்கப்பட்டிருந்த பிளக்கின் பகுதியை துண்டித்துவிட்டு, வயரின் இரண்டு பாகங்களை செலுத்தி மின்சாரம் எடுக்க முயன்றபோது மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கியதில் அவரது அலறல் சத்தம் கேட்ட அயலவர் மாணவியை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ திடீர் மரண விசாரணை அதிகாரி தஅஜித் விஜேசிங்க அங்கு மேற்கொண்ட விசாரணையில், தையல் இயந்திரத்திற்கு அருகில் அறுக்கப்பட்டிருந்த பிளக்கின் பாகம், கம்பி வடம் என்பன சற்று தொலைவில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் தந்தை 2023 ஆம் ஆண்டு மலேசியாவில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது உயிரிழந்ததாகவும், தாய் சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version