Site icon Tamil News

ஐபோனுக்கு போட்டியாக Samsung நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை

பாதுகாப்பு மற்றும் ஒரு நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தல் காரணத்திற்காக ஆப்பிள் நிறுவனம் பல வருடங்களாகவே ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. ஆனால் இது ஒரு சிறிய பஞ்ச் ஹோல் கட்டவுட் கொண்ட போனுடன் ஒப்பிடும் பொழுது ஸ்கிரீனின் குறிப்பிடத்தக்க சதவீதத்தை எடுத்துக் கொள்கிறது.

இப்போது சாம்சங் நிறுவனம் குறைவான இடத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய மற்றும் அதே நேரத்தில் அதிக பாதுகாப்பு வழங்கும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளது. X யூசரான ஹைஙாக்கி ரையோஹி கூறுகையில், சாம்சங் நிறுவனம் 2025 -ஆம் ஆண்டில் சாம்சங் கேலக்ஸி S25 போனில் போலார் ஐடி -யை (PolarID) வெளியிட உள்ளது. இந்த தொழில்நுட்பம் தற்போது சந்தைக்கு முந்தைய நிலையை அடைந்திருப்பதாகவும், ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் ஐடி போல அல்லாமல் இந்த போலார் ஐடி -க்கு கூடுதல் சென்சார்கள் தேவை இல்லை என்றும், இது அதிகப்படியான இடத்தை எடுத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறுகிறார்.

அதாவது சாம்சங் நிறுவனம் அதன் புதிய தொழில்நுட்பத்தை ஒரு பஞ்ச் ஹோல் வடிவமைப்புடன் மட்டுமே வெளியிடும் என்று இதன் மூலமாக தெரிகிறது. மேலும் போலார் ஐடி -ஐ ஃபேஸ் ஐடி மற்றும் பிற ஃபேஷியல் அங்கீகார தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும் பொழுது அதிக பாதுகாப்பாகவும், சிறந்த செயல் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக இந்த போலார் ஐடி குவால்காம் ஸ்னாப்டிராகனின் காம்ப்யூடேஷன் பவரை பயன்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. மேலும் Samsung ISOCELL Vizion 931 ஏற்கனவே அதன் சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், அது Galaxy S25 Ultra போனில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிர்மாறாக சாயர் கேலாக்ஸ் என்ற மற்றொரு யூசர், இந்த தொழில்நுட்பம் கேலக்ஸி S25 அல்ட்ரா ஃபோனில் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். மாறாக அது கேலக்ஸி S26 அல்ட்ரா ஃபோனில் கிடைக்கலாம் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை போன்ற மற்றொரு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு சாம்சங் நிறுவனத்திற்கு போதுமான நேரம் தேவைப்படுவதை இவர் இதற்கான காரணமாக குறிப்பிடுகிறார். எனினும் இது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய நிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அடுத்த வருடம் வெளியிட உள்ள ஐபோனில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றத்தை திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S26 அல்ட்ரா போன் வாங்கும் கஸ்டமர்களுக்கு இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை வழங்குவதன் மூலமாக ஆப்பிள் நிறுவனத்தை விட அதிக பயோமெட்ரிக் ஆப்ஷன்களை சாம்சங் நிறுவனம் வழங்க உள்ளது.

Exit mobile version