Site icon Tamil News

YouTube வீடியோக்களை நீக்கக்கூடாது!

யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் அவர்களது காணொளிகளை நீக்கினால் பெரும் சிக்கலை சந்திக்கக்கூடும் என யூடியூப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக தினசரி யூடியூப்பில் ஏதாவது பார்க்கவில்லை என்றால் பலருக்கு அன்றைய பொழுது நல்லபடியாக போகாது என்ற நிலை இருக்கிறது. பொழுதுபோக்கிற்கு யூட்யூப் தளம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

இதை வெறும் பொழுதுபோக்கு தளமாகப் பார்ப்பது மட்டுமின்றி, யூடியூப் மூலமாக வருமானம் ஈட்டுபவர்களும் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். பல youtube சேனல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து, கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர். இதில் ஒரு சிலர் சச்சையான பதிவுகளைப் போடுவதால் சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர். இதனால் பல youtube சேனல்கள் சிக்கலை ஏற்படுத்திய காணொளிகளை நீக்கிவிடுவார்கள். அதேபோல காப்பிரைட் பிரச்சினையாலும் சில காணொளிகள் youtube தரப்பிலிருந்து நீக்கப்படும்.

ஆனால் இப்போது youtube-ல் காணொளிகளை நீக்குவது குறித்து youtube தரப்பிலிருந்து எச்சரிக்கை பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. இதை youtube-ன் முக்கிய அதிகாரியான Todd B என்பவர் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “யூடியூபில் ஏதேனும் சேனல்கள் தவறான வீடியோக்களை பதிவேற்றி இருந்தால், அதை டெலிட் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக பதிவேற்றிய காணொளி யாருக்கும் தெரியாதவாறு ஹைடு செய்து விடுங்கள். ஒருவேளை தொடர்ச்சியாக உங்களது காணொளிகளை youtube-ல் இருந்து நீங்கள் டெலிட் செய்யும் பட்சத்தில், உங்கள் சேனல் பிறருக்கு காட்டப்படாதவாறு மறைக்கப்படும்” என எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு தற்போது யூடியூபர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபில் காணொளி பதிவேற்றும்போது அதில் ஏதேனும் தவறு இருந்தால், நீக்குவதையே யூட்யூபர்கள் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். ஆனால் இனி அப்படி செய்தால் தங்களின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

 

Exit mobile version