Site icon Tamil News

இரவோடு இரவாக ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைனில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை : அதிர்ச்சியில் மேற்குலகம்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுளளது.

ரஷ்யா கியேவ் மற்றும் பிற உக்ரேனிய நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது ,

சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது ஏராளமானோர் காயமடைந்தனர் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கபப்ட்டுளளது.

உக்ரைன் முழுவதும் சேதமடைந்த கட்டிடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை ஆகியவை அடங்கும்.

உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ் மற்றும் நாட்டின் மேற்கில் உள்ள லிவிவ் ஆகிய நகரங்களைத் தாக்கியதாக இரு நகரங்களின் மேயர்கள் அறிவித்துள்ளனர்.

கார்கிவ் நகரின் மேயர் நகரத்தின் மீது “பாரிய ஏவுகணைத் தாக்குதலை” அறிவித்தார், அதே சமயம் எல்விவில் உள்ள அவரது பிரதிநிதி இரண்டு தாக்குதல்கள் தொடர்பில் அறிவித்துள்ளார்.

கார்கிவ் பிராந்திய இராணுவ நிர்வாகம் ரஷ்யா “நகரத்தின் மீது சுமார் 10 தாக்குதல்களை நடத்தியது” என்று அறிவித்துள்ளது.

உக்ரேனிய அதிகாரிகள் நாட்டின் மேற்கத்திய நட்பு நாடுகளை வெள்ளிக்கிழமை போன்ற வான்வழித் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள அதிக வான் பாதுகாப்புகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version