Tamil News

ரஷ்ய தூதரகத்தால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஆஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டம்

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு அருகே ரஷ்யா புதிய தூதரகத்தை கட்டுவதை தங்கள் அரசு தடுக்கும் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா குத்தகைக்கு எடுத்துள்ள ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு அருகே உள்ள நிலத்தில் புதிய தூதரக கட்டிடத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளது.ஆனால் இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது. இதன் காரணமாக தலைநகர் கான்பெராவில் அமைய உள்ள ரஷ்யாவின் புதிய தூதரகத்தை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் சபை கூடியது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், ‘பாராளுமன்றத்திற்கு மிக அருகில் ஒரு புதிய ரஷ்ய பிரசன்னத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து அரசாங்கம் மிகத் தெளிவான பாதுகாப்பு ஆலோசனையைப் பெற்றுள்ளது. குத்தகை தளம் ஒரு முறையான இராஜதந்திர பிரசன்னமாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் விரைவாக செயல்படுகிறோம்.

எங்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்! ரஷ்யாவின் செயலை தடுப்போம்..அவுஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டம் | Australia Pm Albanese Vow Stop Russia

தெளிவாக சொல்வதென்றால், இன்றைய முடிவு ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக எடுக்கப்பட்ட ஒன்றாகும். மேலும் இந்த விடயத்தில் ஒத்துழைத்த எதிர்க்கட்சி மற்றும் செனட் ஆகியோருக்கும் நான் நன்றி கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல், கான்பெராவில் முன்மொழியப்பட்ட இரண்டாவது ரஷ்ய தூதரகத்தின் முக்கிய பிரச்சனை அதன் இருப்பிடம் என உள்துறை அமைச்சர் Clare O’Neil குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலியாவின் ஆட்சேபனைகளை மீறி கட்டுமானப் பணிகளை முடிக்க உறுதி பூண்டிருப்பதாக ரஷ்ய தூதரகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version