Tamil News

காதலி கத்தியால் குத்திக் கொலை… தண்டனை குறித்து கூகுளில் தேடிய காதலன்!

காதலியின் இதயத்தில் கத்தியால் குத்திக் கொன்ற காதலன், உடலை குப்பை தொட்டியில் வீசி ஏறிந்ததுடன் கொலை குற்றத்திற்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூகுளில் தேடியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் காதலன் ஜூன் சியோங் டான் அவரது காதலி கெல்லி ஜாங்கை 2021ல் இதயத்தில் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.காதலன் ஜூன் சியோங் டான் இந்த செயலை செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, தன்னுடைய காதலி மற்றும் 8 வயது மகனுடன் உணவருந்தி உள்ளார். அதன் பின் ஏற்பட்ட பிரச்சினையில் ஜூன் சியோங் டான் தனது காதலியை குத்திக் கொன்றுள்ளார்.

அத்துடன் உடலை குப்பை தொட்டியில் தூக்கி போட்டுவிட்டு, காத்திருந்து குப்பை தொழிலாளர் அதை எடுத்து செல்வதை பார்த்துக் கொண்டு நின்றுள்ளார்.மேலும் ஆஸ்திரேலியாவில் நாற்றமடிக்கும் குப்பைகளை எவ்வாறு அகற்றுகிறார்கள் என்றும், கொலை குற்றத்திற்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்றும் கூகுளில் தேடியுள்ளார்.

காதலின் இதயத்தில் குத்திக் கொன்ற காதலன்: தண்டனை குறித்து கூகுளில் தேடியது அம்பலம் | Lover Stabbed Girl Friend Heart In Australia

கொலை செய்யப்பட்ட 4 மாதங்களுக்கு பிறகு மெல்போர்ன் குப்பை கிடங்கில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டது.அத்துடன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், தனது காதலி தனக்கு துரோகம் செய்வதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

விசாரணை அடுத்த வாரம் மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version