Site icon Tamil News

குருட்டுத்தன்மையுடன் வரிசையாக இறந்த பூனைகள்… அமெரிக்காவில் தீவிரமடையும் பறவைக்காய்ச்சல்

சில மாதங்களுக்கு முன் தெற்கு அட்லாண்டிக் கடற்கரையின் ஜார்ஜியா தீவில் பல பழுப்பு நிற ஸ்குவாக்கள் இறந்ததை அடுத்து, அதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் H5N1 என்ற பறவைக்காய்ச்சலால் அவை இறந்ததாக உறுதிசெய்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் ஆடு மாடுகளுக்கிடையே பறவைக்காய்ச்சல் பரவி வருவதாகவும், தொற்று பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளிலிருந்து பெறப்படும் பாலில் H5N1 இருப்பதாகவும் ஆகவே கறந்த பாலை உட்கொள்ளவேண்டாம் என்று சமீபத்தில் அமெரிக்காவில் நோய் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் இத்தகைய வைரஸ் பாதிக்கப்பட்ட பாலை குடித்ததால், பூனைகள் குருட்டுத்தன்மை அடைந்து இறந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பூனைகள் இரண்டு நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளது. மேலும் அப்பண்னையில் பல பூனைகளும் நோய்வாய்ப்பட்டிப்பதை அறிந்த அப்பண்ணை உரிமையாளர், நோய் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியுள்ளார். அதன்படி இறந்து போன பூனைகளை பரிசோத்தித்த நோய் கட்டுப்பாடு வாரியம், H5N1 வைரஸ் தாக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்பட்ட பச்சைப்பாலை பூனைகள் உட்கொண்டதால் பூனைகளுக்கும் H5N1 பாதிப்பு ஏற்பட்டு, இறந்ததாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்த விரிவான விசாரணையில், பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் சாப்பிட்ட பிறகு பூனைகளை வைரஸ் தாக்கியுள்ளதாகவும், இதனால் பூனைகள் கண்பார்வை இழந்ததுடன், நுரையீரல், மூளை, இதயம் உட்பட பல உறுப்புகளை வைரஸ் தீவிரமாக தாக்கியுள்ளதாக நெக்ரோப்ஸி முடிவுகள் சுட்டிக்காட்டின.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பறவைக்காய்ச்சல் உலகமக்களிடையே கவலையை அதிகரித்துவருகிறது

Exit mobile version