Site icon Tamil News

ரொனால்டோ படைத்த புதிய சாதனை

கால்பந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக திகழும் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நடப்பு ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

அல் இட்டிஹாத் அணிக்கு எதிரான சவுதி புரோ லீக் போட்டியில் அல் நாசர் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்திருந்தார். இதன் மூலம் நடப்பு ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் 53 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாக, ரொனால்டோ 53 கோல்களுடன் இந்த ஆண்டு அதிக கோல் அடித்தவர் தரவரிசையில் முன்னணியில் உள்ளார்.

கைலியன் எம்பாப்பே (52), ஹாரி கேன்(52), மற்றும் ஹாலண்ட் (50) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

சவுதி ப்ரோ லீக், ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக், கிங்ஸ் கோப்பை சாம்பியன்ஸ், அரபு கிளப் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் ரொனால்டோ இந்த 53 கோல்களையும் அடித்துள்ளார்.

எவ்வாறாயினும், UAFA இன் அரபு கிளப் சாம்பியன்ஸ் கோப்பையை ஒரு பெரிய போட்டியாக பீஃபா அங்கீகரிக்கவில்லை. இந்தப் போட்டியில் ரொனால்டோ ஆறு கோல்களை அடித்துள்ளார்.

எனவே இந்த ஆறு கோல்களையும் பீஃபா கருத்திற்கொள்ளாது எனவும், இதனால் நடப்பு ஆண்டில் அவரின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 47ஆக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டொனால்டோவிற்கு பெரிய அடியாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 30ஆம் திகதி அல் தாவூன் அணிக்கு எதிராக ரொனால்டோ விளையாட இன்னும் ஒரு வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், கைலியன் எம்பாப்பே மற்றும் ஹாரி கேன் ஜனவரி 2024இலேயே மீண்டும் விளையாடுவார்கள்.

ஹாலண்டின் மான்செஸ்டர் சிட்டி நாளை விளையாடினாலும், காயம் காரணமாக அவர் விளையாட மாட்டார்.

எனவே ரொனால்டோவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது. அடுத்தப் போட்டியில் ரொனால்டோ ஐந்து கோல்களை அடித்தால் 52 கோல்களுடன் எம்பாப்பே மற்றும் ஹாரி கேன் ஆகியோருடன் இணைந்துகொள்வார்.

Exit mobile version