Site icon Tamil News

வானில் தோன்றும் நெருப்பு வளையம் : லைவ் டெலிகாட்ஸ் செய்ய தயாராகும் நாசா!

அக்டோபர் மாதத்தில் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் சூரிய கிரகணத்தை அமெரிக்கா வாழ் மக்களால் பார்வையிட முடியும் என நாசா அறிவித்துள்ளது.

இது குறித்து ஓ (டுவிட்டர்) இல் பதிவிட்டுள்ள நாசா இந்த சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தோன்றும் என அறிவித்துள்ளது.

இந்த அற்புதமான இயற்கை நிகழ்விற்கு நாசா ‘நெருப்பு வளையம்’ கிரகணம் எனப் பெயரிட்டுள்ளது.

இந்த கிரகணம் வடக்கே ஓரிகானில் இருந்து தெற்கே டெக்சாஸ் நகருக்கு நகரும் எனவும் மக்கள் வெறும் கண்ணால் இந்த இயற்கை நிகழ்வைக் காண முடியும் என்றும் நாசா கூறுகிறது.

சந்திரன் சூரியனுக்கு முன்னால் கடந்து செல்வதால்  வானத்தில் ஒரு ‘நெருப்பு வளையம் உருவாகும். இந்த வரலாற்று நிகழ்வை அமெரிக்கா வாழ் மக்களால் பார்க்க முடியும் எனவும் இதனை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

நாசாவின் யூடியூப் சேனலில் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஒளிபரப்பு செய்யப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

Exit mobile version