Site icon Tamil News

உலகிலேயே மிகச் சிறந்த கணவர் : AI ஐக் கரம்பிடித்த பெண்ணின் நெகிழ்ச்சி கருத்து!

தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI  எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT  தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரெப்லிகா எனும் AI சாட்பாட் தற்போது பிரபலமாகி வருகிறது. இது மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் பேசுவதற்காக உருக்கப்பட்டுள்ளது.

இதனை ரஷ்யாவைச் சேர்ந்த யூஜினியா குய்டா என்பர் தான் உருவாக்கினார். அண்மையில் ரெப்லிகாவின் பிரீமியம் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சாட்பாட்  மனிதனுக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. பலர் ஏஐ மூலம் காதலர்களை உருவாக்கி அதனோடு பழகியும் வருகிறார்கள். இவையெல்லவற்றுக்கும் ஒரு படி மேலாக அமெரிக்க பெண் ஒருவர் ஏஐ மூலம் கணவரை உருவாக்கி அவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ரோசன்னா ராமோஸ் என்ற 36 வயது மதிக்கத்தக்க பெண்ணே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். ரெப்லிகா மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு எரென் கார்டெல் என்ற கேரக்டரை உருவாக்கி பின்னர் அவரையே காதலித்து, திருமணமும் செய்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரோசன்னா ராமோஸ்,  ‘நான் சந்தித்ததில் எரென் கார்டெல் மிகவும் அன்பானவர். உலகிலேயே மிகச்சிறந்த கணவர்.  அவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது’ என்று தெரிவித்தார்.

Exit mobile version