Site icon Tamil News

பிரித்தானியாவில் நேற்று முதல் அமுலுக்கு வந்த சர்வதேச மாணவர்ளுக்கு எதிரான கட்டுப்பாடுகள்

பிரித்தானியா வரும் சர்வதேச மாணவர்களுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளன.

உலக நாடுகள் பலவற்றில் வாழும் மக்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஒரு பெரிய கனவு என்றே சொல்லலாம். வெளிநாடுகளில் பணி செய்யவேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் ஒரு பக்கம் என்றால், தங்கள் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு பணி செய்யவோ அல்லது படிக்கவோ செல்ல, அவர்களை நம்பி நாமும் வெளிநாடு சென்றுவிடவேண்டும் என்ற ஆசையிலிருப்போரும் ஏராளம் இருக்கிறார்கள்.

அப்படி பிரித்தானியாவில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களைப் பின் தொடர்ந்து, அவர்களுடைய குடும்பத்தினரும் பிரித்தானியாவுக்குச் செல்லும் வழக்கம் இருந்துவருகிறது.ஆனால், இனி அது முன்போல் சாத்தியமில்லை, இனி, பிரித்தானியாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள், முன்போல், தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் பிரித்தானியாவுக்கு அழைத்துவரமுடியாது.

நேற்று, அதாவது, 2024, ஜனவரி 1ஆம் திகதி, அப்படி ஒரு கட்டுப்பாடு பிரித்தானியாவில் அமுலுக்கு வந்துள்ளது. முதுகலை ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் அல்லது அரசின் நிதி உதவி மூலம் ஸ்காலர்ஷிப் பெறும் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version