Tamil News

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் உணவகம் சுற்றிவளைப்பு – உரிமையாளரின் மோசடிகள் அம்பலம்

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் வெம்ப்ளி பகுதியில் உள்ள உணவகத்தின் உரிமையாளர் தனது ஊழியர்களை நவீன அடிமைத்தனத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

உள்துறை அலுவலக அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கு சட்டவிரோதமாக வேலை செய்த 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். ஒருவர் வீடற்ற நிலையில் சமையலறை தரையில் தூங்குவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வெம்ப்லியில் உள்ள ஒரு சைவ இந்திய உணவகமான சரஸ்வதி பவனின் உரிமையாளர் அனில் வெர்மா, அடித்தள மட்டத்தில் உள்ள ஐந்து ஊழியர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

ஊழியர்களை நவீன அடிமைகளாக வைத்திருந்ததுடன், குறைந்தபட்ச ஊதியமும் குறைவாகவே அனில் வெர்மா வழங்கியுள்ளார் என இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகாரிகளிடம் தகவல் வெளியிட்ட ஊழியர் ஒருவர் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஒரு நாளைக்கு பத்து மணி நேரம், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்வதாக, அதற்காக வெர்மா அவர்களுக்கு ஒரு நாளைக்கு 30 அல்லது 40 பவுண்ட்கள் மாத்திரமே கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் சட்டங்களை நன்கு அறிந்திருந்த உணவகத்தின் முதலாளியான வெர்மா அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 4 பவுண்டுகள் மட்டும் வழங்கி தனது பொறுப்புக்களை தவறியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களில் ஒருவரின் விசா காலாவதியாகி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. அவர் பிரித்தானியாவில் பணிபுரியும் உரிமையைக் கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையில் வெர்மா அதிகாரிகளிடம் கருத்து வெளியிடுகையில், அவர்களின் விசா காலாவதியாகிவிட்டது. நாட்டில் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் இந்தியாவில் மோசமாக பாதிக்கப்படுவதால் உதவ முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் கடந்த மூன்று மாதங்களாக அங்கு வேலை செய்வதாக ஒப்புக்கொண்டார், அதற்காக அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 900 பவுண்ட் பணமும், உணவகத்தில் இருந்து உணவும் வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் பணிபுரிய தங்களுக்கு உரிமை இல்லை என்றும், பணியைத் தொடங்குவதற்கு முன் எந்த ஆவணத்தையும் காட்டவில்லை எனவும் அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

உள்துறை அலுவலக ஊழியர்களுடன் ஒரு நேர்காணலின் போது, வர்மா ஊழியர்களின் கடவுசீட்டு நகலைக் கேட்டதாகவும், ஆனால் அதைப் பெறவில்லை அல்லது அதனை கேட்டு துரத்தவில்லை என்றும் கூறினார்.

சமையலறையில் தூங்கிக் கொண்டிருந்த ஊழியர் 2006 ஆம் ஆண்டு லொறியில் மறைந்திருந்து இங்கிலாந்துக்குள் நுழைந்ததாகக் கூறினார். நாட்டில் இருப்பதால், விசாவிற்கு விண்ணப்பிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பத்து நாட்களாக அவர்கள் உணவகத்தில் வசித்து வருவதாகவும், அதற்கு “கடையின் உரிமையாளரால் அனுமதி வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எந்த வாடகையும் செலுத்துவதில்லை மற்றும் தரையில் அட்டைப் பெட்டியில் தூங்குவதனை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

 

Police identify potential victims of modern slavery and human trafficking across Thames Valley area | Milton Keynes Citizen

அவர்கள் சமையலறையில் உறங்கிக் கொண்டிருந்தது தனக்குத் தெரியாது என வெர்மா அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி, குடிவரவு அதிகாரிகளால் சரஸ்வதி பவனை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, குடிவரவுச் சட்டம் 1971 இன் கீழ் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஏழு ஊழியர்கள் சட்டப்பூர்வமாக பணிபுரிவது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version