Site icon Tamil News

பிரான்ஸ் அட்லாண்டிக் கடற்கரையில் கரையொதுங்கிய 910 டால்பின்கள்!

அட்லாண்டிக் கடற்கரையில் 910 டால்பின்கள் கரையொதுங்கியதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

குளிர்காலம் தொடங்கியதிலிருந்து பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் குறைந்தது 910 டால்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக கடல்சார் ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இதுவரை காணாத அளவில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 400-க்கும் மேற்பட்ட கடல் பாலூட்டிகள் கரையோரத்தில் ஒதுங்கியது என்று மேற்கு நகரமான லா ரோசெல்லை தளமாகக் கொண்ட பெலகிஸ் கடல்சார் ஆய்வகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது வெறும் தற்காலிக புள்ளிவிவரங்கள் தான் என்றும் ஆய்வகம் கூறியது.

டால்பின்களின் ஆரம்பகால பரிசோதனையில், அவற்றில் சில இறந்து சில நாட்களும், மற்றவை இறந்து பல வாரங்களாகவும் இருந்தன.

 

அவற்றில் பெரும்பாலானவை மீன்பிடி வலைகள், மற்ற மீன்பிடி உபகரணங்கள் அல்லது படகு இயந்திரங்களில் சிக்கிய காயமடைந்துள்ளன.2017 மற்றும் 2020க்கு இடையில், குளிர்காலத்தில் கரையொதுங்கிய டால்பின்களின் சராசரி எண்ணிக்கை 850ஆக இருந்தது.அவற்றில் பெரும்பாலானவை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இறந்தன, டால்பின்கள் வழக்கமாக உணவுக்காக கடற்கரைக்கு அருகில் நகர்கின்றன மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விஞ்ஞானிகளும் அந்த மாதங்களில் மீன்பிடித்தலை தற்காலிகமாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.ஆனால் அதற்கு பதிலாக டால்பின்கள் மீது தொழில்துறை மீன்பிடித்தலின் தாக்கத்தை குறைக்கும் தீர்வுகளை அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது, அதாவது உள் கேமராக்கள் அல்லது விரட்டிகள் போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version