Site icon Tamil News

அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடையை நீக்க தீர்மானம்!

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடையை செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து நிதியமைச்சு இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை வாரந்தோறும் மீளாய்வு செய்யவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 286 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதுடன்,  வாகனங்கள் உட்பட 930 இதர வாகனப் பொருட்கள் மீதான இறக்குமதி தடை அமலில் உள்ளது.

ஆனால் செப்டம்பர் முதல் வாரத்திற்குள் எஞ்சியுள்ள பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை இரண்டு கட்டங்களாக நீக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன் மூலோபாய திட்டத்தின்படி அது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

Exit mobile version