Site icon Tamil News

ஜெர்மனியில் 49 ஆயிரம் பேருக்கு வதிவிட அனுமதி!

ஜெர்மனி நாட்டில் அகதி நிலை நிராகரிக்கப்பட்ட 49 ஆயிரம் பேருக்கு வதிவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜெர்மனிய நாட்டில் அதிகரித்து வரும் அகதிகளுடைய எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மன் அரசாங்கமானது சில நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியமானது ட்ருனேசியா நாட்டுடன் ஏற்கனவே இந்த விடயம் சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதாகவும் தெரியவந்து இருக்கின்றது.

கூடுதலான அகதிகள் மத்திய தரை கடல் பிதேசத்தின் ஊடாக வரும் பொழுது ட்ருனேசியா ஊடாக வருவதாக தெரியவந்த காரணத்தினால் இவ்வாறான சில பேச்சு வார்த்தைகளை ஐரோப்பிய ஒன்றியதுடைய தலைவியான வொர்டேன் லேன் அவர்களும் ட்ருனேசியா நாட்டுக்கு சென்று இது சம்பந்தமான பேச்சு வார்த்தை ஒன்றையும் மேற்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் தற்கொழுது ஜெர்மன் அரசாங்கமானது ஜோர்ஜியா, மோல்டாவா மற்றும் உஸ்பிகிஸ்தான், கெகிஸ்தான், கென்யா மற்றும் மொரோக்கோ போன்ற நாடுகளுடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு சில ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜோர்ஜியா மற்றும் மொல்டாவா போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவ நாடாக தங்களை இணைத்துக்கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொள்கின்ற காரணத்தினால்
இந்த 2 நாடுகளுடனும் மிக விரையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜெர்மன் அரசாங்கமானது பரீட்சார்த்தகமான வதிவிட விசா ஒன்றை 18 மாதங்களுக்கு சில நிபந்தனைகள் அடிப்படையில் வழங்குவதற்கு சட்டம் ஒன்றை இயற்றி இருந்தது.

இந்த சட்டத்தின் படி 49 ஆயிரம் பேர் இவ்வாறு ஏற்கனவே தற்காலிக வதிவிட விசாவை வைத்துக்கொள்கின்றவர்கள் இந்த விசாவிற்காக தகுதிகளை பெற்று இருந்தாலும் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு இவ்வாறான விசா வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றுது.

இந்நிலையில் 2100 பேருடைய தற்காலிக பரீட்சார்த்தகமான வதிவிட விசாவை பெறுவதற்கு உரிய விண்ணப்பத்தை நிர்வாகமானது நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version