Site icon Tamil News

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு மீண்டும் கோரிக்கை!

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பானில் இருந்து வாகனங்களை கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக சங்கத்தின் அச்சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே கூறுகிறார்.

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் இருந்து பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வாகனங்களின் விலை தற்போதைய விலையை விட 70% குறையலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version