Site icon Tamil News

சூர்ய குமார் யாதவை ஆச்சரியப்படுத்திய செய்தியாளர்கள்

 

அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 03 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் போட்டிக்கு இந்திய ஊடகங்கள் செலுத்திய கவனம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இரண்டு ஊடகவியலாளர்கள் மாத்திரமே பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தலைவராக இருக்கும் சூர்ய குமார் யாதவ், செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று இரண்டு பத்திரிகையாளர்கள் மட்டுமே இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வழக்கமாக நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியப் பத்திரிகையாளர்கள் இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதாகவும், சில சமயங்களில் அந்த எண்ணிக்கை 200ஐத் தாண்டுவதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

சுமார் ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியால் வீரர்களும், செய்தியாளர்களும் சோர்ந்து போயிருப்பதா அல்லது இந்திய அணியின் தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றம்தான் இதற்குக் காரணமா என்பது கேள்வியாகியுள்ளது.

மேலும், உலகக் கோப்பையில் பங்கேற்ற இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தப் போட்டியின் மூன்றாவது போட்டிக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயரும் இந்திய அணியில் இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version