Site icon Tamil News

அட்லாண்டிக் கடல் பகுதியில் விபத்திற்குள்ளான அகதிகள் படகு ; 89 பேர் உயிரிழப்பு

வடமேற்கு ஆபிரிக்க நாடான மாரிடோனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நடுக்கடலில் தத்தளி்துக்கொண்டிருந்த மீன்பிடி படகிலிருந்து 89 உடல்களை மாரிடோனியா படரோலக்காவல் படையினர் மீட்டனர். மேலும், அந்தப் படகிலிருந்து 5 வயது சிறுமி உற்பட 9 பேருடன் உயிருடன் மீட்கப்பட்டனர்.

செனகல் மற்றும் காம்பியாவிலுந்து 170 பேரை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்றுகொண்டிருந்த போது அந்தப்படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் படகிலிருந்த 72 பேர் மாயமாகியுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.

அட்லாண்டிக் கடல் வழித் தடத்தில் கடந்த 2007ம் ஆண்டுக்கி பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமனா அகதிகள் படகு விபத்து இது என்று கூறப்படிகிறது

Exit mobile version