Site icon Tamil News

அமெரிக்காவில் கொசுக்களால் பரவும் அரிய நோய் – 3 பேரில் ஒருவர் பலி

அமெரிக்காவில் கொசுக்களால் பரவும் ஒரு அரிய நோய் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

இது நோய்த்தொற்றுக்கு ஆளான ஒவ்வொரு 3 பேரில் ஒருவர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள ஒருவர், மிகவும் அரிதான கொசுக்களால் பரவும் eastern equine encephalitis (EEE) என்ற வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நியூ ஹாம்ப்ஷயர் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை ஒரு அறிக்கையில், Hampsteadஇல் உள்ள வயது வந்தவர், கடுமையான மத்திய நரம்பு மண்டலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 30 சதவீதம் பேர் இறக்கின்றனர், மேலும் உயிர் பிழைத்தவர்களில் பலர் உடல் ரீதியான அல்லது உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

15 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

தற்போது தடுப்பூசி அல்லது சிகிச்சை இல்லை, மேலும் கொசுக்கள் பெருகும் இடங்களைக் குறைக்க பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தவும், வெளிப்புறங்களில் பாதுகாப்பு ஆடைகளை அணியவும், வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.

Exit mobile version