Site icon Tamil News

அனுர வென்றாலும் சஜித் வெல்லக் கூடாது- இதுவே ரணிலின் நிலைப்பாடு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொது வேட்பாளர்கள் என்ற போர்வையில் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியே இடம்பெற்று வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போ​தே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அத​ேவேளை, வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவை அனுரகுமார திசாநாயக்க ​பெற்றாலும் பரவாயில்லை, சஜித் பிரேமதாச பெற்றுவிடக் கூடாது என்ற மனப்பாங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ​செயற்பட்டு வருவதாக அவர் இதன் போது குற்றம்சுமத்தினார்.

இதனிடையே, “மலையக அரசியல்வாதியான வேலுகுமார் கூறுகிறார், எதிர்வரும் வாரத்தில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமாரும் எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி ரணிலின் கட்சியில் சென்று சேர்ந்து விடுவோம் என்று, ஆனால் அந்த கூற்றில் எந்தவித உண்மையும் இல்​லை.

நாங்கள் தான் ஐக்கிய மக்கள் கட்சியை ஸ்தாபிப்பதற்கு முன்னின்று செயற்பட்டோம். எனவே இந்த கட்சியை விட்டு மாறுவதற்கு எங்களுக்கு எந்தவித நோக்கமும் இல்லை” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Exit mobile version