Site icon Tamil News

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் தென்னாபிரிக்க ஜனாதிபதியுடன் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுடன் இணைந்து ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் பல தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (19.01) பிற்பகல் இடம்பெற்றது.

இங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தென்னாபிரிக்க ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதேவேளை, தான்சானியா பிரதமர் காசிம் மஜலிவாவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்.

மேலும், பஹாமாஸ் பிரதமர் பிலிப் ஈ டேவிஸ், எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமட், பெனின் மக்கள் அரசாங்கத்தின் துணைத் தலைவர் மரியம் சாபி தலதா ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Exit mobile version