Tamil News

கூலியில் ரஜினியின் கெட்டப் இதுதான்? சூட்டிங் எப்ப தெரியுமா? லோகேஷ் மாஸ் அப்டேட்

சூப்பர் ஸ்டார் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளி வருகிறது.

இதை அடுத்து தலைவர் லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இதன் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதிலும் ரஜினி முடிச்சிடலாமா என சொன்ன அந்த டயலாக் வேற லெவலில் இருந்தது.

அதன்படி இப்போது லோகேஷ் தலைவருக்கு லுக் டெஸ்ட் செய்த போட்டோவை வெளியிட்டு ஜூலை மாதத்தில் இருந்து சூட்டிங் தொடங்கும் என அறிவித்துள்ளார். இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் அந்த போட்டோவில் ரஜினி கழுத்தில் ருத்ராட்சம் கண்ணில் கூலிங் கிளாஸ், கருப்பு உடை என படு ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட காலா படத்தில் பார்த்தது போன்ற தோற்றத்தில் உள்ளார்.

அவரை லோகேஷ் செல்போனில் போட்டோ எடுக்கிறார். அந்தப் புகைப்படம் தான் தற்போது வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் இந்த போட்டோவை ரசிகர்கள் அதிவேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜெயிலர் மூலம் பெரும் வெற்றியை ருசித்த சன் பிக்சர்ஸ், ரஜினி கூட்டணி மீண்டும் இணைந்து இருக்கின்றனர். எப்படியும் இந்த கூட்டணி ஆயிரம் கோடியை வசூலித்து விடும் என இப்போதே கணிப்புகள் வர ஆரம்பித்துவிட்டது.

Exit mobile version