Tamil News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ரஜினி சமீபத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்தார்.

இதையடுத்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பீடேஷ்வர் 171 படத்தின் பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.

ஏற்கனவே வெளியான தகவலின்படி தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அதன்படி லோகேஷ் கனகராஜ் தனது நண்பரும் பிரபல இயக்குனருமான ரத்னகுமாருடன் இணைந்து படத்தின் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிக்க பிரபல நடிகர் பாபு ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version