Site icon Tamil News

சிங்கப்பூரில் இந்தியர் ஒருவருக்கு எதிராக இனவெறி எச்சரிக்கை!!

சிங்கப்பூரில் பயணி ஒருவருக்கு எதிராக வாடகை டாக்ஸி சாரதி இனவெறி கருத்து தெரிவித்த சம்பவம் குறித்து அந்த நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வாடகை டாக்ஸி சாரதி, தொடர்புடைய பயணியை இந்தியாவுக்கே ஓடிவிடு என கூறியதாக தெரியவந்துள்ளது. சிங்கப்பூரின் Grab என்ற வாடகை டாக்ஸி நிறுவன சாரதி ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பயணி தமக்கு ஏற்பட்ட இந்த செயலை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அருகாமையில் உள்ள சாலையில் வேலை நடப்பதால், தம்மால் உரிய நேரத்திற்கு வந்து அழைத்துச் செல்ல முடியாது என்றும்,

இதனால் காத்திருக்க தேவையில்லை எனவும் அந்த சாரதி சம்பவத்தின் தொடக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தமது பதிவை ரத்து செய்யும் படி பாதிக்கப்பட்ட பயணி குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்தே அந்த சாரதி, தாங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து இந்தியருக்கு இங்கு என்ன வேலை, நாட்டுக்கே திரும்புங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருவதுடன், வேலை பார்த்துவரும் தமக்கு இது இனவாத தாக்குதலாகவே உணர்வதாக அந்த பயணி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வெளியான நிலையில், Grab நிறுவனம் விசாரணை முன்னெடுக்க இருப்பதாக உறுதி அளித்துள்ளது.

Exit mobile version