Site icon Tamil News

பதவியேற்றவுடன் அதிரடி திட்டம் போட்ட புட்டின் : நேட்டோ நாடுகள் தான் குறியாம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கத்திய தலைவர்களை சோதிப்பதற்காக நேட்டோ நாட்டின் மீது “சிறு படையெடுப்பை” திட்டமிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக போலந்தின் உயர்மட்ட உளவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போலந்தின் எதிர் புலனாய்வு சேவையின் தலைவரான ஜரோஸ்லா ஸ்ட்ரோசிக், பால்டிக் நாடுகளை கைப்பற்றுவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக எஸ்டோனியா மற்றும் ஸ்வீடனின் சில பகுதிகளை ஆக்கிரமிப்பதை ரஷ்ய தலைவர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

பால்டிக் நாடுகளில் ஒன்றிற்கு எதிராக சில சிறிய நடவடிக்கைகளுக்கு புட்டின் ஏற்கனவே தயாராகிவிட்டதாவும் போலந்தின் உயர்மட்ட அதிகாரி எச்சரித்துள்ளார்.

உக்ரேனை ஆதரிப்பதற்காக மேற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுகின்ற நிலையில், நேட்டோ நாடுகள் மீது புட்டின் தாக்குதல் நடத்தினால் இது மூன்றாம் போருக்கு வழிவகுக்கும் என்பதும் சுட்டிகாட்டத்தக்கது.

Exit mobile version