Site icon Tamil News

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளை “புதிய ரஷ்யா” என்று அறிவித்த புடின்

டான்பாஸ் மற்றும் பிற ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை “புதிய ரஷ்யா” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.

மாஸ்கோவின் ரெட் சதுக்கத்தில் தனது மறுதேர்தல் மற்றும் கிரிமியாவை ரஷ்யா இணைத்ததன் 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையின் போதே புடின் இதனை தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் சில பகுதிகள் வழியாக ஒரு புதிய ரயில் இணைப்பு கட்டப்பட்டு வருவதாக புடின் மேலும் கூறியதுடன் அந்த பகுதிகள் “தங்கள் சொந்த குடும்பத்திற்கு திரும்புவதற்கான விருப்பத்தை அறிவித்துள்ளன” என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் வழியாக கிரிமியா வரை புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று புடின் மேலும் அறிவித்தார். இந்த பாதையானது தீபகற்பத்தை ரஷ்யாவின் நிலப்பரப்புடன் இணைக்கும் தற்போதைய பாலத்திற்கு மாற்று வழியாக அமையும்.

“இவ்வாறு ஒன்றாக, கைகோர்த்து, நாம் முன்னேறுவோம். இதுதான் – வார்த்தைகளில் அல்ல, ஆனால் செயல்களில் – நம்மை மிகவும் வலிமையாக்குகிறது” என்று புடின் கூறினார்.

Exit mobile version