Tamil News

புஷ்பா 2 வெளியாகும் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது…

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021-ம் ஆண்டு புஷ்பா படம் வெளியானது.

படத்தில், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘புஷ்பா -2’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

Exit mobile version