Site icon Tamil News

வன்முறை வெடித்தது – பற்றியெரியும் பாரிஸ்

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பாரிசில் கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர இடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வன்முறை காரணமாக வர்த்தக நிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்என் கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது.
ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version