Site icon Tamil News

விருது பெற்ற உக்ரைன் எழுத்தாளர் விக்டோரியா அமெலினா உயிரிழந்தார்

விருது பெற்ற உக்ரைன் எழுத்தாளர் விக்டோரியா அமெலினா காலமானார்.

கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்கில் உள்ள பீட்சா உணவகம் மீது மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவருக்கு37 வயது.

கிராமடோர்ஸ்க் நகரம் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு அருகில் இருப்பதாக கூறப்படுகிறது.

நகரின் பிரபலமான ரியா லவுஞ்ச் உணவகத்தில் கொலம்பிய ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குழுவுடன் உணவருந்தியபோது அவர் தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

PEN உக்ரைன், மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்தனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துள்ளார்.

(PEN உக்ரைன் என்பது பேச்சு சுதந்திரம் மற்றும் எழுத்தாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, இலக்கியம் மற்றும் சர்வதேச கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட உக்ரைனிய அரசு சாரா அமைப்பாகும்..)

“எழுத்தாளர் விக்டோரியா அமெலினாவின் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று PEN உக்ரைன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை போர்க்குற்றம் என மனித உரிமை ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தத் தொடங்கிய உக்ரைனின் மிகவும் பிரபலமான இளம் எழுத்தாளர்களில் அமெலினாவும் ஒருவர்.

Exit mobile version