Tamil News

மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற எகிப்து பிரதமர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் உத்தியோகபூர்வ பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா சென்றார்.

அங்கு சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அமெரிக்க நாடாளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக எகிப்து சென்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார். விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி முதல்முறையாக எகிப்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version