Site icon Tamil News

தமிழகத்துக்கு எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யாதவர் பிரதமர் நரேந்திர மோடி : மு.க. ஸ்டாலின்

தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யாத பிரதமர் நரேந்திர மோடி எந்த முகத்துடன் இங்கு வருகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தை மட்டுமல்ல. எந்த திட்டங்களையோ, உதவியோ செய்யாடஹ் பிரதமர் எந்த முகத்தோடு தமிழகம் வந்துள்ளார்? வாக்கு கேக்க மட்டும் மோடி வந்து செல்ல தமிழகம் என்ன சரணாலயமா? தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களா?

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகத்தையும் மோடி வஞ்சிக்கிறார்.

பெண் சக்தி பற்றி பேசும் மோடி, பெண்கள் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு சென்றாரா?

மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்?

ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையும் மதிக்கும் இந்தியா கூட்டணி பிரதமர் மத்தியில் ஆட்சியில் அமர்வார்.

விடியல் பயணம், நான் முதல்வர், புதுமைப்பெண் என்று திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் பேசியுள்ளார்.

Exit mobile version