Site icon Tamil News

அதிபர் தேர்தல் : பைடனைவிட கமலா ஹாரிசை வெல்வது மேலும் எளிதாக இருக்கும்- டிரம்ப்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனைக் காட்டிலும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிசை வெல்வது மேலும் எளிதாக இருக்கும் என்று தாம் நம்புவதாக குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஹாரிஸ் முன்னிலை வகிப்பதைச் சில கருத்துக்கணிப்புகள் காட்டியுள்ளபோதும், டிரம்ப் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபரான டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.இந்நிலையில், சிகாகோவில் திங்கட்கிழமை நடைபெறும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கவிருப்பதை முன்னிட்டு, துணை அதிபர் கமலா ஹாரிஸ் மேற்கு பென்சில்வேனியாவில் பேருந்துச் சுற்றுலா ஒன்றை மேற்கொள்கிறார்.

“பைடனைவிட ஹாரிசை வெல்வது மேலும் எளிதாக இருக்கும் என்று நாம் நம்புகிறேன்,” என்று கூறிய டிரம்ப், ஹாரிஸ் “தீவிரக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்” என்றும், “மனநலம் குன்றியவர்” என்றும் சொன்னார்.

சில கொள்கைகளின் தொடர்பில் ஹாரிஸ் இடதுசாரி போக்குக் கொண்டவர் என்பதைக் காட்ட டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக ஹாரிஸ் நாட்டுக்கு முக்கியமான ‘ஃபிராக்கிங்’ தொழில்துறைக்குத் தடை விதிக்க முன்வைத்த கோரிக்கையை அவர் பிரசாரக் கூட்டத்தில் சுட்டினார். இருப்பினும், அந்தத் தடைக்கு ஹாரிஸ் தற்பொழுது ஆதரவு தெரிவிக்க மாட்டார் என்று அண்மையில் அவரது இயக்கம் கோடிகாட்டியது.

டிரம்ப், தனிப்பட்ட முறையிலும் ஹாரிசைத் தாக்கினார். அத்தகைய கருத்துகள் டிரம்ப்பின் வாக்குகளைப் பாதிக்கக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version