Site icon Tamil News

அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்ற தயாராகும் ஜனாதிபதி

பல அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திருத்தத்தின் கீழ் சில அமைச்சுச் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், மக்கள் நலக் கொள்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறிய சில அமைச்சுச் செயலாளர்கள் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை படிப்படியாக மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் எடுத்து வரும் பொருளாதார மற்றும் சமூக நலன்புரி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்காத அமைச்சின் செயலாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மக்களுக்கு உரிய சேவை கிடைக்கவில்லை என பொதுமக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்ட அமைச்சு செயலாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version