Site icon Tamil News

பொது ஒழுங்கை பாதுகாக்க ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது ஒழுங்கைப் பேணுமாறு ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது தேர்தலுக்கு முன்னோடியாக இருக்கும் முக்கியமான காலகட்டத்தில் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளை அணிதிரட்டுகிறது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களில் பொது ஒழுங்கை கண்காணிக்கும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை இந்த உத்தரவுக்கு உட்பட்டது.

அத்துடன் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version