Tamil News

தமிழக அரசே!! ’மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்யுங்கள்! சுவரொட்டிகளால் பரபரப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் தயாராகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி தேனியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த படம் வருகிற 29ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை சுட்டிக்காட்டி பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது.

இதனால், இந்த படம் சாதி அடிப்படையிலான சர்ச்சை கதையம்சத்தில் தயாராகி உள்ளதாக சமூகவலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், மாமன்னன் படத்தை தடை செய்ய வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசு இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version