Site icon Tamil News

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

இலங்கையில் பழைய நிகழ்வுகள் தொடர்பான காணொளிகளை மீண்டும் சமூக ஊடகங்களில் தற்போதைய நிகழ்வுகளாக பரப்பி மக்களை தவறாக வழிநடத்தும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்களில், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பரவி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிக்கும் குறிப்பிட்ட வாகனங்களை பல்வேறு நபர்கள் சோதனையிடுவது, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளிகள் போன்ற பல்வேறு சூழ்நிலைகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான காணொளிகளை சமூக ஊடகங்களில் மீண்டும் பரப்புவதன் மூலம் தவறான கருத்து பரப்பப்படும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் நேரடியாக தலையிடும் வகையிலும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் காணொளிகளை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.

Exit mobile version