Site icon Tamil News

அமெரிக்காவில் கரண்டி வைத்திருந்த நபரை சுட்டுக்கொலை செய்த பொலிஸார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரில் பிளாஸ்டி முள்கரண்டியைப் பிடித்துக்கொண்ருந்த நபரை பொலிஸார் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

இம்மாதம் 3ஆம் திகதி நடந்த அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அவர் விதிமுறைக்கு உட்பட்டு ஆயுதத்தைப் பயன்படுத்தினாரா என்று விசாரிக்கப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவர் 36 வயது ஜேசன் லீ மக்கானி என்று அடையாளம் கூறப்பட்டது.

கட்டிடம் ஒன்றின் நடைபாதையில் அந்த ஆடவரைச் சுமார் 6 காவல்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

அவர் அதிகாரிகள் சொல்வதைக் கேட்காமல் அவர்களை நோக்கி நடந்து வந்தார். அவர் கையில் ஏதோ கூர்மையான ஆயுதம் வைத்திருப்பதாக அதிகாரிகள் நினைத்தனர். அவரை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் முடியவில்லை.

அந்த நபர் பெண் அதிகாரி ஒருவரது துப்பாக்கியைப் பறிக்க முயன்றார். அந்தச் சூழ்நிலையில் மற்றோர் அதிகாரி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Exit mobile version