Site icon Tamil News

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் யார்?

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் நரேந்தி மோடி.

அவரது தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அஃபிப் ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த தலைவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

இதில் ஏற்கெனவே பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பங்கேற்றுள்ளனர்.

Exit mobile version